அதிகரிப்பு திருப்புவனத்தில் மணல் கடத்தல் கண்டும் காணாமல் உள்ள அதிகாரிகள்
திருப்புவனம்:
திருப்புவனத்தில் இரவு நேரத்தில் வைகை ஆற்றில் நடக்கும் மணல் திருட்டால் ஆறே பாலை வனம் போல் மாறி வருகிறது.
தேனி மாவட்டம் வருஷ நாடு மலைப் பகுதியில் உற்பத்தி ஆகும் வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை , சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. வைகை ஆற்றில் தொடர் மணல் திருட்டு காரணமாக பாறைகள் தென்பட்டு ஆறு பாலைவனமாக மாறி வருகிறது. தென் மாவட்டங்களில் மணல் குவாரிகள் இல்லாத நிலையில் திருப்புவனத்தில் கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் ஆற்று மணல் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றை ஒட்டி குடியிருக்கும் பலரும் வேன், டிராக்டர்களில் மணலை திருடி வீடுகள், தென்னந்தோப்புகளில் பதுக்கிவைத்து, விற்பனை செய்கின்றனர். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய வருவாய் மற்றும் கனிம வளத்துறையினர் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக சென்ட்ரிங் பணிகளுக்கு ஆற்று மணல் தான் உறுதியாக இருக்கும் என கட்டட உரிமையாளர்கள் அதிக விலை கொடுத்து திருட்டு மணலை வாங்கி பயன்படுத்துகின்றனர். மானாமதுரையில் திருட்டு மணலை வாங்கிய கட்டட உரிமையாளர், புரோக்கர், லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோரை போலீசார் கைது வருகின்றனர். ஆனால் திருப்புவனத்தில் புதிதாக உருவாகி வரும் குடியிருப்புகளில் ஆற்று மணல் குவித்து வைத்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்தாண்டு போதிய மழை இல்லாததால் ஆறு, கால்வாய், கண்மாய்களில் தண்ணீர் இல்லை. இதனை பயன்படுத்தி மணல் திருட்டு அதிகரித்து விட்டன. சிவகங்கை மாவட்ட தேவை போக, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் பதுக்கி வைத்து மணல்களை கடத்தி வருகின்றனர். இதனால் கனிம வளத்துறை அனுமதியில்லை என கூறினாலும், அவர்கள் கண்டும்காணாமல் இருந்து வருவதால், மணல் கொள்ளை அதிகரித்து, இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இது போன்று மணல் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்
-
'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு
-
உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
-
பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
-
நலத்திட்ட உதவி தொகை வழங்கல்
-
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா