நல்ல மகராசன் எனக்கு நல்லது பண்ணி விட்டார்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
நமது நிருபர்
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது: மழை பாதிப்பை சமாளிக்க முதல்வர் விஜய் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார். மழை பாதிப்பை ஆய்வு செய்ய நானும் சென்னை சென்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் மழை பாதிப்பை சமாளிக்க முதல்வர் விஜயின் ஒப்புதலோடு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கும் இடத்திற்கு செல்வதற்கு, 250 படகுகள் தயார் நிலையில் உள்ளன.
15 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு வருவார்கள் என்று நான் எப்போதும் சொல்லவில்லை; அதிமுகவில் இருந்து 15 பேர் வருகின்றனர் என்று தான் சொன்னேன். 15 அதிமுக எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று நான் சொன்னதற்கு ஏதாவது ரிகார்ட் காட்டுங்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது; காலம் பதில் சொல்லும். பொதுவாக நான் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.
உலகத்தை சில தலைவர்கள் வென்று காட்டி இருக்கிறார்கள். ஆனால் காலத்தை எவராலும் வெல்ல முடியாது. காலத்தை வென்று காட்டியவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதல்வர் விஜய் தான். அதிமுகவில் கட்சியினரை நீக்குவது இதே பொழப்பாக போய்விட்டது. இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியாது. அவருக்கெல்லாம் பதில் சொல்வது தேவையில்லை.
நல்ல மகராசன் எனக்கு நல்லது பண்ணி விட்டார். என்னை நீக்கவில்லை என்று சொன்னால் இன்று அமைச்சராகி இருக்க முடியாது. என்னை தாங்கி பிடித்து இன்று அமைச்சராக்கி அழகு பார்க்கிறார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர். அவருக்கு வாழ்த்துக்களை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வாசகர் கருத்து (12)
சூர்யா - ,
19 அக்,2026 - 05:48 Report Abuse
செங்கோட்டையன் பேச்சைக் கேட்டால் ஊர் ஊராகப் போய் முருங்கைக்காய் பறிக்க வேண்டியது தான். 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
18 அக்,2026 - 17:43 Report Abuse
கூவத்தூரில் டீ.டீ.வி டெண்டர் விட்ட போது நீங்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருந்தால் நீங்கள் தலைவராகியிருக்கலாம். அவர் அதிக தொகை கப்பம் கட்டுகிறேன் என்று சொல்லி ஆட்சியைப் பிடுங்கிக் கொண்டார். 0
0
Reply
Azhagu - ,இந்தியா
18 அக்,2026 - 16:56 Report Abuse
படுத்தே விட்டான்யா மொமண்ட்.. 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
18 அக்,2026 - 16:29 Report Abuse
செங்கோட்டையன் அண்ணே உங்க நல்லமனசுக்கு நீங்கள் எப்போதும் நல்லா இருப்பீங்க. பழனிச்சாமியிடம் அடங்காத உங்களின் தைரியத்துக்கு விஜய் கொடுத்த பரிசுதான் உங்களுக்கான அமைச்சர் பொறுப்பு. கலக்குங்க நீங்க. வயிறு எரியட்டும் பழனிச்சாமிக்கு 0
0
புதியவன் - ,
18 அக்,2026 - 22:01Report Abuse
அடங்காத தைரியமா? யாருக்கு உங்க செங்கோட்டையனுக்கா? அம்மா அடிச்ச அடில ரொம்ப நாளா சென்னைப் பக்கமே தலை வச்சுக் கூட படுக்கலே இந்த தைரியசாலி. உள்ளூர் தற்குறிகளுக்கே இது தெரியாது. வெளி நாட்டு West தற்குறிகளுக்கு எங்கே இதெல்லாம் தெரியப்போகுது? 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
18 அக்,2026 - 15:54 Report Abuse
இல்லேனா அட்ரஸ் இல்லாமல் .போயிருப்பே . தப்பிச்சிட்டே 0
0
Reply
குமரன் - ,
18 அக்,2026 - 15:53 Report Abuse
திரு எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? [1]
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது இதுதானோ 0
0
Palanisamy - ,இந்தியா
19 அக்,2026 - 20:45Report Abuse
அய்யா, இது எம்ஜிஆர் அவர்களின் பாடல் வரிகளில்லை. எழுதிக் கொடுத்ததை அவரப் பாடவுமில்லை. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
18 அக்,2026 - 15:00 Report Abuse
அதிமுகவின் சீனியர் மோஸ்ட் நீ. இன்று தவெக. வில் ஐந்தோ அல்லதுஆறாவது குட்டித்ததலைவன் என்ற அதிருப்தி மனதிலிருந்தாலும் வேறு வழியின்றி காலந்தள்ளுகிறாய் என்பதை நாங்கள் அறிவோம். 0
0
Reply
கேயார் - ,
18 அக்,2026 - 14:05 Report Abuse
காலத்தை வென்றவன் என்ற பெயர் எம்.ஜிஆருக்குதான் எப்போதும் உண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த அடிமைப் பெண் படத்தில் கூட காலத்தை வென்றவன் நீ என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். தனது பதவி சுகத்துக்காக எம்.ஜி.ஆரை கூட மறந்து காலத்தை வென்றவன் என விஜயின் காலடியில் விழுந்து கிடக்கிறார் செங்கோட்டையன். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
18 அக்,2026 - 13:46 Report Abuse
ஆக அமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்பட்டு லாட்டரியின் கொத்தடிமையாகி விட்டீர்களா? 0
0
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
18 அக்,2026 - 17:41Report Abuse
டெட்பாடியிடம் படுத்துக் கிடப்பதற்கு இங்கே கும்பிட்டுக் கிடந்தால் கல்லா நிறையும்.அரசியலில் சுய மரியாதை என்ற கருத்தே தவறு என்று நினைப்பவர்கள். 0
0
Reply
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
Advertisement
Advertisement