உயர்கோபுர மின்விளக்கு பழுது இருளில் மூழ்கிய தண்டலம் சாலை

திருப்போரூர்: தண்டலம் ஆறு வழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு பழுதடைந்து, இருளில் மூழ்கியுள்ளதால், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்போரூர் அடுத்த தண்டலம் வழியாக, காலவாக்கம் – வெங்கலேரி வரை ஆறு வழிச்சாலை உள்ளது.

இச்சாலை வழியாக தண்டலம், ஆலத்துார் பகுதி மக்கள் நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான பிரதான சாலையாகவும் இது உள்ளது. ஆறு வழிச் சாலையில்,

உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து அப்பகுதி முழுதும் இருளில் மூழ்கியுள்ளது. ஒரு மாதங்களாகியும் பழுதடைந்த மின்விளக்கு சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருளை பயன்படுத்தி மர்ம நபர்கள் வழிப்பறி போன்ற செயல்படுவதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பழுதடை ந்த உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement