வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மேலமங்கலத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு நடந்தது. -

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 15 காளைகளும், 135 வீரர்கள் பங்கேற்றனர். காளைக்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களம் இறக்கப்பட்டனர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 3 பேர் காயமுற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement