திமுக ஆட்சியின் ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் பணிகள் பயன்தருகிறதா? சென்னை மாநகராட்சி சொல்வது இதுதான்
சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் அளித்த பேட்டி;
சென்னையில் நேற்று பெய்த மழையில் எதிர்பார்க்காத சில இடங்களில் நீர் தேங்கியிருப்பதை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பிராட்வே, பிரகாசம் சாலை, பாரிசை ஒட்டிய பகுதிகளில் பெரிய வடிகால்கள் கட்டி இருக்கிறோம். ஆனால் அங்கெல்லாம் மழைநீர் தேங்கியிருந்தது. காரணம் அங்கு குறைந்த நேரத்தில் 36 செமீ மழை பெய்திருந்தது.
2005ம் ஆண்டில் இருந்து பல்வேறு திட்டங்கள் 2026ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிகால்கள் கட்டியிருக்கிறோம். இது மாநகராட்சி மூலமாக மட்டுமல்ல, தமிழக நீர்வளத் துறை மூலமாகவும் பெரிய திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பெரிய நீர்த்தேக்கங்களை தூர் வாரியிருக்கிறோம்.
எனவே தனியாக ஒவ்வொன்றையும் எடுத்து, சாதகமாகவோ அல்லது விமர்சனமாகவோ பார்த்தால் சரியாக இருக்காது. ஒருமுறை மழைநீர் வடிந்து விட்டது என்பதை வெற்றியாக கொண்டாட முடியாது. அதில் உள்ள அனுபவங்களை உணர்ந்து கொண்டு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தான் முதல்வர் எங்களுக்கு ஆணையிட்டுள்ளார். அந்த கோணத்தில் தான் நாங்கள் செய்திருக்கிறோம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த உட்கட்டமைப்பு வசதிகள், கண்டிப்பாக மாநகராட்சிக்கு உதவுகிறது. அதோடு முடிவதில்லை. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். உட்கட்டமைப்புடன் பராமரிப்பும் முக்கியம்.
வடிகால்களுக்கு கொள்ளளவு என்பது உண்டு. ஒரு மணிநேரத்தில் 6.4 சென்டி மீட்டரில் இருந்து 10 சென்டிமீட்டர் மழையை அந்த வடிகால் உள்வாங்கும். அதற்கு மேல் மழை பெய்தால் கண்டிப்பாக தண்ணீர் வெளியேதான் வரும்.
பொதுமக்களின் சிரமத்தை உடனடியாக குறைக்க வேண்டும், போக்குவரத்தில் உள்ள சிரமத்தை குறைக்க வேண்டும், இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தான், கூடுதலாக மோட்டார் பம்புசெட்டை கொடுத்து, தேங்கிய மழைநீரை வெளியேற்றுகிறோம்.
பேரிடரை பொறுத்தவரை நாம் எல்லாவற்றையும் செய்துவிட்டோம், சாதித்து விட்டோம் என்று சொல்ல முடியாது. இயற்கையுடன் போட்டி போடவும் முடியாது. ஒரு மனிதனால், ஒரு அமைப்பினால் என்ன செய்ய முடியுமோ, அதை கூட்டாக இணைந்து அர்ப்பணிப்புடன் செய்வது தான் எங்கள் நோக்கம்.
இவ்வாறு சமீரன் பேட்டியளித்தார்.
இப்படி ஒரு பேட்டி கொடுப்பதே தவறு. செலவு செய்த 4000 கோடிக்கு இதைவிட சிறப்பாக செய்திருக்கலாம்.ஒரு மணி நேரத்திற்கு 10 செ.மீ மட்டும் தான் தாங்குமாம்.சிங்கப்பூர் ஜப்பான் போன்ற நாடுகளில் எவ்வளவு மழை பெய்தாலும் நீர் வடியும் அளவில் கட்டமைத்துள்ளார்கள்.தயவு செய்து அதை ஆராயவும்.
NOW TIME FOR WATER SCARECITY
4000 கோடி முடிந்த கதை
மழைநீர் வடிகால்வாய்களை ஒவ்வொரு ஆண்டும் மலை காலத்திற்கு முன் தூர் வாரி வைக்க வேண்டும் .அப்பொழுது தான் மழை நீர் வேகமாக வடியும் .
Good and balanced interview. Point to be noted is drainage is designed for 10 cm rain a day. Those are like cricket match days. Now rain is playing 20 20 game. Very heavy rain in very short time is the present trend. Govt has to rethink its strategy to suit nature. Public also should understand that Govt officials also have limitations. No point in shouting about water stagnation.
மிகவும் சரியானதேமேலும்
-
ஆத்துார் – காரைக்கால் மார்க்கத்தில் புதிய அகல ரயில் பாதை எம்.பி.,க்கள் குரல் கொடுக்காததால் கிடப்பில் போன திட்டம்
-
வேய்ந்தான்குளம் நீர்வழிப்பாதையில் வணிக வளாகம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
-
ஈரோடு மாவட்டத்தில் 5 மாதங்களில் கண்டறியப்பட்ட 1,337 காசநோயாளி
-
லோகோ மிஸ்கில் உள்ளது வி.ஐ.டி., பல்கலை நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு
-
பேரிடர் மேலாண்மை பணியில் தனியார் வல்லுனர்கள் சேர்ப்பு வருவாய் துறை நடவடிக்கை
-
முதல்வர் பிரசாரத்திற்கு இடையூறு: 3 பேர் கைது