துாங்கிய பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் துாங்கிய பெண்ணிடம் ஐந்தரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் மனைவி விஜயசாந்தி, 29; இவரது தாய் செல்வி, 52; இருவரும் நேற்று முன்தினம் கணங்கூர் கிராமத்திற்கு உடல் நிலை சரியில்லாமல் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றனர்.

இரவு அங்கேயே துாங்கினர். நள்ளிரவு 1:30 மணியளவில் மர்ம ஆசாமிகள் 3 பேர் செல்வி அணிந்திருந்த ஐந்தரை சவரன் தாலிச் செயினை பறித்து கொண்டு தப்பியோடினர்.

விஜயசாந்தி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement