குழந்தை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை; கணவர், பெற்றோர் மீது வழக்கு
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த, 18 வயது இளம்பெண்ணுக்கும், சூளகிரி பஸ்தலப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி திருமல்லேஷுக்கும், 28, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு ஜூன், 22ல் திருமணமானது. கர்ப்பமடைந்த இளம்பெண்ணுக்கு கடந்த, 8ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை திருமணம் மூலம் இளம்பெண் கர்ப்பமானதை அறிந்த டாக்டர்கள், ஓசூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இளம்பெண்ணிடம் நேற்று முன்தினம் புகார் பெற்ற போலீசார், கணவர் திருமல்லேஷ், அவரது தந்தை சின்னதிம்மைய்யா, தாய் சந்திரம்மா, பெண்ணின் தாய் மாதம்மா என நான்கு பேர் மீது, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Advertisement
Advertisement