'ராகுல் நடத்துவது அரசியல் போராட்டம் இல்லை: ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திட்டமிட்ட செயல்'
புதுச்சேரி: ராகுல் சமீப நாட்களாக 'அரசியல் எதிர்ப்பு' என்ற வார்த்தையை பயன்படுத்தி போராட்டம் நடத்தவில்லை, ஜனநாயகத்தை சீர்குலைத்து நடத்தும் போராட்டம் என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார்.
புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் அவர், கூறியதாவது;
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சமீப நாட்களாக 'அரசியல் எதிர்ப்பு' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார். இதன் உண்மையான நோக்கம் ஜனநாயகப் போராட்டம் அல்ல; இந்திய ஜனநாயகத்தை சீர்குலைத்து அழிக்கும் திட்டமிட்ட முயற்சியாகும்.
ஜனநாயக வழியில் அதிகாரத்தை பெற முடியாததால், ராகுல் அவரது கூட்டமைப்பும் ஜனநாயகத்தை அழித்து 'ஆட்சி மாற்றத்தை' நடத்த சதி செய்கின்றனர்.
'ஜனநாயகத்தை காப்பாற்றுகிறோம்' என, ராகுல் மற்றும் பிரியங்கா, பங்களாதேஷ் இயக்கத்தை தங்களின் 'வழிகாட்டும் ஒளி' என்று வெளிப்படையாக வர்ணிக்கும் நேஹா போரா போன்ற நபர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர்.
வாக்காளர் பட்டியல் நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் பொதுமக்களை துாண்டிவிட்டு, ஜனநாயக மீதான நம்பிக்கையை சிதைக்கும் செயலாகும்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்., ஆம் ஆத்மி, மற்றும் மாணவர் குழுக்கள், 'பங்களாதேஷ் மாடல்' ஆதரவாளர்களுடன் போராடுவது, தேர்தல் குறைகள் என்ற போர்வையில் நாட்டை வன்முறையில் தள்ள சதி இருப்பதை குறிக்கிறது.
நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் டில்லியில் 'பங்களாதேஷ் பாணி' கலவரங்களை துாண்ட எதிர்க்கட்சி சதி செய்வதாக தெரிகிறது' என்றார்.
நிகழ்ச்சியில், முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநில தலைமை செய்தி தொடர்பாளர் அருள்முருகன், பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், ஊடகத் தலைவர் நாகேஸ்வரன் உடனிருந்தனர்.
பாண்டிச்சேரி பாஜக கொஞ்சம் அரசியல் செய்கிறது அதுவே ஆறுதல்மேலும்
-
நாங்கள் அதிகம் உழைக்கிறோம்; குறைவாகவே விளம்பரப்படுத்துகிறோம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
-
தங்கச் சந்தையில் உலகளவில் ஜொலிக்க தயாராகும் இந்தியா
-
மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே
-
மாநில பேட்மின்டன் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
-
விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
-
பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு