சில்வர் பீச்சில் காற்றாடி திருவிழா பொதுமக்கள் உற்சாகம்

கடலுார்: சில்வர் பீச்சில் நடந்த காற்றாடி திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

கடலுார் சில்வர் பீச்சில் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். அந்த வகையில் தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான பொதுமக்கள், பைக், கார்கள், ஆட்டோக்கள் மூலமாக சி்ல்வர் பீச்சில் குவிந்தனர்.

சிறுவர்கள் கடல் அலையில் விளையாடியும், பெரியவர்கள் கடல் நீரில் கால்களை நனைத்தும் மகிழ்ந்தனர்.

மணற்பரப்பில் கூட்டமாக அமர்ந்து கடலின் அழகை ரசித்தனர். சிலர் கடலில் குளித்து மகிழ்ந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பீச்சில் காற்றாடி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், எஸ்.பி., விவேகானந்தா சுக்லா முன்னிலையில், அமைச்சர் ராஜ்குமார் காற்றாடி விழாவை துவக்கி வைத்தார். 10க்கும் மேற்பட்ட பல வண்ணமயமான காற்றாடிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Advertisement