எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கு ஸ்டிரே கவுன்சிலிங் அறிவிப்பு பி.டி.எஸ்., ஆயுர்வேதம் படிப்பிற்கு புதிய விண்ணப்பங்களும் வரவேற்பு
புதுச்சேரி: சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்புகளின் காலியிடங்களை நிரப்புவதற்கான ஸ்டிரே சுற்று கலந்தாய்வு அறிவிப்பும், பி.டி.எஸ் மற்றும் பி.ஏ.எம்.எஸ்., படிப்புகளுக்கு புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு, மேலாண்மை மற்றும் என்.ஆர்.ஐ., ஆகிய ஒதுக்கீடுகளின் கீழ் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஏஎம்எஸ் இடங்களுக்கான 3ம் சுற்று சேர்க்கை பட்டியல் மற்றும் காலியிடங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பமுள்ள தகுதியான மாணவர்கள் தங்கள் டேஷ்போர்டு லாகின் சான்றுகளைப் பயன்படுத்தி, பாடப்பிரிவு விருப்பங்களைப் பதிவு செய்யலாம்.
முழு கட்டணம் தொகையைச் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருப்பப் பதிவு மற்றும் கட்டணம் செலுத்த நாளை 20ம் தேதி மாலை 5:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நிரப்பப்படாத பி.டி.எஸ்., மற்றும் பி.ஏ.எம்.எஸ்., இடங்களுக்கு நீட் தகுதி பெற்ற மாணவர்களிடம் இருந்து புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதிய விண்ணப்பதாரர்கள் இன்று 19ம் தேதி மாலை 5.00 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ஏற்கனவே உள்ள மெரிட் பட்டியல் முழுமையாக முடிந்த பிறகே புதிய விண்ணப்பதாரர்களின் சேர்க்கை பரிசீலிக்கப்படும்.
அகில இந்திய அல்லது மாநில ஒதுக்கீட்டின் 3-வது சுற்றில் இடம் பெற்று கல்லுாரியில் சேர்ந்தவர்கள், சென்டாக் 3-வது சுற்று கலந்தாய்வில் இடம் கிடைத்தும் கல்லூரியில் சேராதவர்கள் மற்றும் எம்.சி.சி., ஸ்டிரே சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்கள் இந்த ஸ்டிரே சுற்றுக்குத் தகுதியற்றவர்கள்.
ஸ்டிரே சுற்றில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் புதியதாக விருப்பப் பதிவைச் செய்ய வேண்டும்.
3-ம் சுற்றில் பதிவு செய்த விருப்பங்கள் செல்லாது. மேலும், இச்சுற்றில் ஸ்லைடிங் முறை அனுமதிக்கப்படாது. ஸ்டிரே சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு டியூஷன் கட்டணம் அல்லது பதிவுக்கட்டணம் திருப்பி தரப்படாது.
புதுச்சேரி எஸ்.சி, எஸ்.டி, இ.பி.சி., மற்றும் ஜி.எஸ்.எஸ்., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்று சேராவிட்டால், அவர்களின் பதிவுக்கட்டணமான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்-க்கு ரூ. 50,000, பி.ஏ.எம்.எஸ்-க்கு ரூ. 25,000 திருப்பி தர மாட்டாது.
இம்மாணவர்கள் அடுத்து வரும் கலந்தாய்வுகளில் பங்கேற்க முடியாது என்பதோடு, அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படுவார்கள்.
மாணவர்கள் நெட் பேங்கிங் அல்லது என்.இ.எப்.டி, ஆர்.டி.ஜி.எஸ்., சலான் மூலமாக சென்டாக் கணக்கிற்கு உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு கோருபவர்கள் கட்டணம் செலுத்தி, அதற்கான ஆதாரத்தைப் பதிவேற்ற வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும், சந்தேகங்கள் இருப்பின் லாகின் டேஷ்போர்டில் உள்ள குறைதீர்ப்பு பகுதி வாயிலாகவோ அல்லது 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
நியூசிலாந்து முதலீட்டால் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகும்: பியூஷ் கோயல்
-
உணவு பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செ ல்வதில் அலட்சியம்: எப்எஸ்எஸ்ஏஐ எச்சரிக்கை
-
முதல்வர் விஜயை அவதூறாகவும், ஒருமையிலும் விமர்சித்த திமுக நிர்வாகி மீது வழக்கு
-
திமுக ஆட்சியின் ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் பணிகள் பயன்தருகிறதா? சென்னை மாநகராட்சி சொல்வது இதுதான்
-
இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் கவனம்: தூதரகம் எச்சரிக்கை
-
ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள்