காமராஜர் அரசு கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம், காமராஜர் அரசு கல்லுாரியில் என்.சி.சி. தரைப்படை பிரிவு சார்பில் மாணவ, மாணவிகள் தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் விழா திட்டத்தின் கீழ், நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் லெப்டினன்ட் கதிர்வேல் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
இதில் ராணுவ அதிகாரி அசோக், தேசிய மாணவர் படை மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்துவதுடன், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், இயற்கையைப் பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நடுவதுடன் நின்றுவிடாமல், அவற்றை முறையாகப் பராமரித்து வளர்க்க வேண்டும் என்றும், பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வலியுறுத்தப்பட்டது. என்.சி.சி., மூத்த மாணவர் சிவகுரு நன்றி கூறினார்.
மேலும்
-
திமுக ஆட்சியின் ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் பணிகள் பயன்தருகிறதா? சென்னை மாநகராட்சி சொல்வது இதுதான்
-
இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் கவனம்: தூதரகம் எச்சரிக்கை
-
ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ வசதிகள்
-
புதிய ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டர் 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
-
வரி விலக்கு வழங்கியதற்கு வர்த்தக ஒப்பந்தமும் காரணம்: சொல்கிறார் அமெரிக்க அமைச்சர்
-
மாநில தடகளம் 206 பேர் பங்கேற்பு