பல்கலை தொகுப்பூதிய பணியாளர் வலியுறுத்தல்

மதுரை: ‘‘மதுரை காமராஜ் பல்கலையில் பல ஆண்டுகளாக பணியாற்றியோருக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும்’’ என தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இப்பல்கலையில் எழுத்தர், ஓட்டுநர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 187 பேர் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். மொத்த பணியிடங்களில் 429 தொடர்ந்து காலியாக உள்ளன.

தற்போதுள்ள 187 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.40 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்களை பணிவரன்முறை செய்தால் குறைந்த அளவே கூடுதல் நிதி தேவைப்படும். தொகுப்பூதிய பணியாளர்கள் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யவும், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பணிவரன்முறை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க தலைவர் கோபிநாத், செயலாளர் சவரிகுரு மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் விஸ்வநாதனிடம் மனுஅளித்தனர்.

Advertisement