இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
நியூயார்க்: 'உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை, உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முழுமையற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எதிர்மறையாக சித்தரிக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது' என, ஐ.நா., மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுக்கு ஐ.நா., கூட்டத்திலேயே இந்தியா பதிலடி தந்தது.
டில்லியில் கடந்த சில மாதங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக ஐ.நா., மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர். போராட்டங்களின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஐ.நா., பொதுச் சபையின் மூன்றாவது குழுவில் நேற்று விவாதம் நடந்தது. அதில், நம் வெளியுறவு அமைச்சக துணை செயலர் பர்கா தம்ராகர் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை முன் வைத்தார். அவர் பேசியதாவது:
மனித உரிமைகளை அரசியல் அழுத்தம் கொடுப்பதற்கோ, குறிப்பிட்ட நாடுகளை மட்டும் குறிவைப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இந்தியா தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒத்துழைப்பு என்பது பேச்சு, ஆலோசனை, பாரபட்சமின்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.
ஐ.நா., அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தகவல்களை பிரதிநிதிகள் சரியான முறையில் எடுத்துரைக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை, ஒரு நாட்டுக்கு எதிரான இறுதி தீர்ப்பாக சித்தரிக்கக் கூடாது.
முறையாக ஆவணப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சம்பவங்கள் குறித்து, உரிய நடைமுறைகள் வாயிலாக விளக்கம் அளிக்க இந்தியா தயாராக உள்ளது. அதே நேரத்தில், உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள், முழுமையற்ற புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை எதிர்மறையாக சித்தரிக்கும் முயற்சிகளை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சபாஷ்.மேலும்
-
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தருவதாக ரூ.300 கோடி முறைகேடு; மாஜி அமைச்சர் மனைவிக்கு சிக்கல்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா