மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'

1

சென்னை: மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில், இன்று(அக்.,22) இடி, மின்னலுடன் மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை அளித்த பேட்டி: தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அக்., 26ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.

துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி, ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், கடலுார், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக இருக்கும்; ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

@block_P@

எல்லோ, ஆரஞ்சு, ரெட் அலெர்ட் என்றால் என்ன?



கனமழை 6 - 11 செ.மீ., வரை பெய்யக்கூடும் என்றால், வானிலை ஆய்வு மையம் அதை எல்லோ அலெர்ட் என எச்சரிக்கை செய்கிறது. அதுவே 11 - 20 செ.மீ., வரை மழை பெய்யக்கூடும் என்றால் ஆரஞ்சு அலர்ட் என்றும் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் என்றால் ரெட் அலர்ட் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.block_P

Advertisement