மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு 49 நாட்களில் 49 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த, 49 நாட்களில், 49 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, மாதம் 1ல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீரை தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார். கடந்த மாதம், 6ல் அணை நீர்மட்டம், 92.39 அடியாக அதிகரித்தது. அதன் பின்பு நீர்வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைய துவங்கியது.கடந்த சில நாட்களாக தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால் நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, 433 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை, 4,738 கனஅடியாகவும், நேற்று மாலை, 4,925 கனஅடியாகவும் அதிகரித்தது.
டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 8,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு அன்று இரவு, 8:00 மணி முதல், 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு அணை நீர்மட்டம், 55.19 அடியாகவும், நீர்இருப்பு, 21.23 டி.எம்.சி.,யாகவும் இர ுந்தது.
அணைக்கு கடந்த செப்.1 முதல் நேற்று வரை, 49 நாட்கள் வினாடிக்கு, 43.5 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. இதில், 49 டி.எம்.சி., நீர் காவிரி மற்றும் கால்வாயில் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மாவட்ட மக்களின் குடிநீருக்காக காவிரியில், 11.8 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டுள்ளது

Advertisement