கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராக களமிறங்கிய 'லால் ஹிட்'
புதுடில்லி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக போராடும் கரப்பான் பூச்சி கட்சியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு பதிலடியாக, டில்லியில், 'லால் ஹிட் கட்சி' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.
கடந்த ஜூலை மாதம், 'நீட்' எனப்படும், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக, கரப்பான் பூச்சி கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. இதன் விளைவாக, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய அமைப்பு
இதைத்தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குற்றஞ்சாட்டி அவர் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவதுாறு
நம் நாட்டின் பிரதமர், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது அவதுாறு குற்றச்சாட்டுகளை சுமத்தும் அமைப்பினருக்கு எதிராக களமிறங்கியுள்ள இந்த அமைப்பு, சமீபத்தில் டில்லி ஜன்பத் பகுதியில் கரப்பான்பூச்சி உட்பட எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது லால் ஹிட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அயன் பட்நாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் அமைப்பு, தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவாக்கப்படவில்லை. நாங்கள், கரப்பான் பூச்சியையும், அதன் போராட்டங்களையும் எதிர்க்கிறோம்.
பல்வேறு குழு
நம் நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும், குழப்பத்தை உருவாக்கவும் முயற்சிக்கும் அக்கட்சியினரை நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் பல்வேறு குழுக்களாக ஒன்றிணைந்து, எங்கள் கருத்துகளையும் வாதங்களையும் முன்வைத்து எங்கள் நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
@block_P@
வீடுகளில் உள்ள கரப்பான் பூச்சிகளை துரத்த, 'ஹிட்' என்ற பெயரில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இது சிவப்பு மற்றும் கருப்பு ஹிட் என்ற பெயர்களில் கிடைக்கின்றன. அதை குறிக்கும் வகையில், 'லால் ஹிட்' கட்சி துவக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பை சேர்ந்தவர் தெரிவித்தார். ஹிந்தியில் லால் என்றால் சிவப்பு என்று அர்த்தம்.block_P
“கரப்பான் கட்சி இரண்டாக உடைந்தது, டமால்” ன்னு போட்டு ஒரு மாசம் முன்னாடி காமெடி பண்ணீங்க. அது என்ன ஆச்சு?
விருமாண்டிக்கு ஒரு லால் ஹிட் பார்சல்
மட விருமாண்டி..கரப்பான் தலைவரு வியட்நாம் ஓடி விட்டாரு..தெரியாதா
Superb
Laal hit will be a super hit with people.
WELCOME LAL HIT .. YOUR HIT SHOULD BE STRONG ENOUGH SO AS TO ERRADICATE EACH AND EVERY COCKROACH AND NO MORE TO RISE UP IN FUTURE
The patriotic countrymen will be with you.
Your stand is absolutely correct and logical. It is only correct that one should fight with the enemy with weapons which they will understand.
Jaihind
INDHA DESA VIRODHA ANNIYA KAICOOLIE KARAPPAN POOCHI KUMBALAI KANDA IDATHIL ADITHU NORUKKA VENDUM.ADHUDHAAN NAATUKKU NALLADHU.
Well done
Congratulations to Lal Hit
As I have been sayint HIT is the only method to eradicate evil cockroaches. Congrats Lal Hit, keep it up and spray in all places including nooks and corners of cocroach hideouts. God Bless.
கரப்பான் பூச்சிகள் வெளிநாட்டு சதி கூலிகள். ராகுல் ப்ளீஸ் ஸ்டாப் அபிஷிங் மோடி .மோடிஜி அருமை தெரியவில்லை. மக்கள் பார்த்துகிட்டு இருக்க மாட்டார்கள்
கரப்பானுக்கு சாப்பாடு போட்டு வரும் ஆட்களை தூக்கிக்கொண்டு வந்தாலே போதும் .சிஜேபி இறந்து விடும் .அதை செய்யவும்மேலும்
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி
-
மழைநீருடன் கலந்து ஓடிய கழிவுநீரால் மக்கள் அவதி