பஞ்சாபில் கார் மோதி 8 தொழிலாளர்கள் பலி

சண்டிகர்: பஞ்சாபில், வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது மோதியதில் எட்டு பேர் பலியாகினர்.

பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தின் லெக்ரகாகா பகுதியில் உள்ள சோட்டியன் என்ற கிராமத்தில், 125 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மொத்தம், 23 பேர் நேற்று மாலை வேலை செய்தனர். ஜகால் சாலையோரத்தில் பணியில் ஈடுபட்ட போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் எட்டு பேர் பலியாகினர்; பலர் காயம் அடைந்தனர். விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement