காஸ் பங்க் ஊழியர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
புதுச்சேரி: விநாயகம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள சி.என்.ஜி காஸ் பங்கில், மதுபோதையில் தகராறு செய்து ஊழியர்களைத் தாக்கி 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விநாயகம்பட்டு, வேலன் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 53; சோரப்பட்டு – விநாயகம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள சி.என்.ஜி காஸ் பங்க் செக்யூரிட்டி. இவர் நேற்று முன்தினம் ஊழியர்கள் சிவா, சூரியபிரகாஷ், அமல்ராஜ், சோனு ஆகியோர் பணியில் இருந்ததபோது, சோரப்பட்டைச் சேர்ந்த புகழ், கார்மேகம், பிரேம் ஆகியோர் குடிபோதையில் பங்கிற்கு வந்து, பணியில் இருந்து ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
படுகாயமடைந்த மாரியப்பன், சூரியபிரகாஷ் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சை பெற்றனர். இதேபோல், கடந்த 13ம் தேதி இரவு சோரப்பட்டைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் அதே பங்க்கிற்கு வந்து, மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.
மாரியப்பன் 4 பேர் மீதும் அளித்த புகாரின் பேரில், புகழ், கார்மேகம், பிரேம் மற்றும் திருமுருகன் ஆகியோர் மீது திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி