ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; மும்பையில் பயங்கரம்

12

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள ஜூஹூ பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு 3 பைக்கில் வந்த கும்பல், அவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். கார் டிரைவர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 12 தனிப்படைகளை அமைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலை தேடி வருகின்றனர். நடிகர் மீது எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டைகர் ஷெராப் மீதான கொலை முயற்சி சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. ஏற்கனவே, இந்த கும்பல் ஹிந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அனில் பண்டிட் என்பவன், இந்த சம்பவம் குறித்து ஆடியோ வெளியிட்டுள்ளான். அதில், 'சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றினால் இதுதான் கதி. எங்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். சல்மான் கானுடன் இணைந்து படம் நடிக்கும் திரையுலகினருக்கு இதுவே இறுதி எச்சரிக்கை, எனக் குறிப்பிட்டுள்ளான்.

Advertisement