பனை விதைகள் நடவு

உத்தமபாளையம்: ஆலிலை பசுமை இயக்கத்தின் சார்பில் ஆனைமலையன் பட்டி கன்னிமார் கோயில் அருகில் உள்ள குளத்தில் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இயக்கத்தின் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பால்ராஜ் (ராயப்பன்பட்டி), பவுன்ராஜ் (ராமசாமி நாயக்கன்பட்டி), கருப்பையா (கோகிலாபுரம் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளக்கரையில் சுமார் 2500 பனை விதைகளை நடவு செய்தனர். பசுமை இயக்க தன்னார்வலர்கள் பொன்னுவேல், நாகேந்திரன், திரவியம், மனோஜ்குமார், கிருஷ்ணகுமார், வாஞ்சிநாதன், மணிகண்டன், ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement