கோயில்களில் ஆயுத பூஜை வழிபாடு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளின் அருளாசி பெற்றனர்.
வீடுகளிலும், அலுவலகங்களிலும் சரஸ்வதி படத்தை அலங்கரித்து புத்தகங்கள், சுண்டல் உள்ளிட்ட நைவேத்யங்கள் படைக்கப்பட்டன. விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ரெங்கநாத சுவாமி கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், வழிவிடு விநாயகர் கோயில்களில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* ராஜபாளையம் சுற்று வட்டார கோயில்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலை முதல் கோயில்களில் சரஸ்வதி தேவி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வணிக நிறுவனங்கள் கடைகளை முழுவதுமாக சுத்தப்படுத்தியும் இரும்பு உள்ளிட்ட அனைத்து பொருட்கள் வாகனங்களை இறைவன் முன்பு வைத்து மா இலை தோரணம், பூக்கள் அலங்கரித்து வாழை இலையில் பொறி, கடலை, சுண்டல் படையல் வைத்து வழிபட்ட பின் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினர்.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை