வீரபாண்டியில் 43.8 மி.மீ., மழை

தேனி: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வீரபாண்டியில் அதிகபட்சமாக 43.8 மி.மீ., மழை பதிவானது.

தேனியில் கடந்த இரு நாட்களாக மாலை, இரவில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சிதோஷ்ண நிலை நிலவியது. நேற்று மாலை மழை பெய்தத போது ரோட்டோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் டூவீலர்களில் சென்றோர் அவதியடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமான வீரபாண்டியில் 43.8 மி.மீ., மழை பதிவானது. அரண்மனைபுதுாரில் 19.6 மி.மீ., சண்முகநதியில் 15.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 13.2 மி.மீ., கூடலுார் 4.8 மி.மீ., பெரியாறு அணை 4.6 மி.மீ., பெரியகுளம் 3 மி.மீ., தேக்கடி 2.6 மி.மீ., ஆண்டிபட்டி 1.8 மி.மீ., போடி 1.6 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 8.50 மி.மீ., மழை பதிவானது.

Advertisement