பொதுத்தேர்வு மாணவர் எண்ணிக்கை உயர்வு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத் தொழில் வாய்ப்புகளால் வெளிமாவட்டத்தினர் வருகை தொடரும் நிலையில், நடப்பாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 7,093 அதிகரித்துள்ளது. இதையடுத்து, தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மாவட்ட கல்வித்துறை சிறப்பு வகுப்புகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2025–2026 கல்வியாண்டில், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 29,013 பேரும், பிளஸ் 2 தேர்வை 26,166 பேரும் எழுதினர். நடப்பு 2026–2027 கல்வியாண்டுக்கான தேர்வர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி ஜூலை இறுதியில் தொடங்கி, செப்டம்பர் கடைசி வாரத்தில் நிறைவடைந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
இதன்படி, நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 28,286 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வை 33,986 பேரும் எழுத உள்ளனர். கடந்த ஆண்டைவிட பிளஸ் 2 தேர்வர்கள் 2,120 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வர்கள் 4,973 பேரும் அதிகரித்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு 2027 மார்ச் 3-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதியும் தொடங்குகிறது.
@block_B@
பொதுத்தேர்வில் சிறந்த தேர்ச்சி சதவீதத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற பாடங்களிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் வகுப்பாசிரியர்கள் மூலம் காலை, மாலை மற்றும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பொதுத்தேர்வுக்குப் போதிய அவகாசம் இருப்பதால், மாணவர்கள் இப்போதே திட்டமிட்டுப் படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற சூழலைப் பெற்றோர் வீட்டில் ஏற்படுத்தித் தர வேண்டும்.
– புனிதா அந்தோணியம்மாள், முதன்மைக்கல்வி அலுவலர்.block_B
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை