கனமழையால் வீடுகள் இடிந்தன; சாலைகள் துண்டிப்பு: கட்டுப்பாட்டு அறைகள் துவக்கம்
மேட்டுப்பாளையம்: வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்யத் துவங்கியுள்ளது. ஊரகப் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. இதனால், இரண்டு இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்களை அடித்துச் சென்றது. சில சாலைகள் அரிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத அளவுக்கு துண்டிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் வாகனங்கள்
மேட்டுப்பாளையத்தில் நேற்று 38 மி.மீ., மழை பதிவானது. காரமடை அருகே குட்டைப்புதூரைச் சேர்ந்த பூபதி, 22 அவரது தங்கை வாசுகி, 19 ஆகிய இருவர் சென்ற மோட்டார் சைக்கிள், வெள்ளத்தில் அடித்துச் சென்றது. தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டனர்.
குளத்துப்பாளையம் கே.ஆர்.நகர் பகுதியில், காய்கறி லாரி, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதால், பள்ளத்தில் கவிழ்ந்தது.
மேட்டுப்பாளையம் குரும்பனூர் செல்லும் பாதையில், பாலத்தின் இரும்புத் தடுப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. பாலத்தின் அருகே இருந்த 2 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
வீடுகள் இடிந்தன
காரமடை அடுத்த கிட்டாம்பாளையத்தில், பழனியம்மாள் மற்றும் ராமசாமி என்பவர்களின் வீடுகளில் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. பாவடி மைதானத்தில் மழை நீர் தேங்கியதால், மூன்று வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மேட்டுப்பாளையம் தாசில்தார் சரவணகுமார் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் தாலுகாவில் கனமழையால், இரண்டு வீடுகளும், சில இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளன. கலெக்டர் வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டார். இடிந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகையும், அரிசி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன, என்றார்.
சாலை துண்டிப்பு
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிக்கதாசம்பாளையம் அருகே குரும்பனூர் இந்திரா நகரில், பள்ளத்தின் குறுக்கே தரைமட்ட பாலம் ஒன்று இருந்தது. கிட்டம்பாளையம், பஞ்சுக்காடு, தேக்கம்பட்டி, குருந்தமலை சுற்றுப்பகுதியில் உள்ள பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் இப்பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
இங்கு உயர்மட்ட பாலம் கட்ட ரூ. 2.60 கோடி ஒதுக்கப்பட்டது. ஓராண்டாக மிக மெதுவாக பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்த பள்ளத்தின் வழியாக, பொதுமக்கள் செல்ல மண் சாலை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், மண் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், இதனால் குருந்தமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. மக்கள் 3 கி.மீ., தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பருவமழைக்கால பேரிடர்களைச் சமாளிக்க வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
@block_B@
பருவமழையை எதிர்கொள்ள, உள்ளாட்சிகளில் கட்டுப்பாட்டு அறைகள் துவக்கப்பட்டுள்ளன.
சூலூர் ஒன்றியத்தில் உள்ள, 18 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள், 0422 - 2587238 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, மழை தொடர்பான பாதிப்புகள், உதவிகள் குறித்து தெரிவிக்கலாம். இக்கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.block_B
மேலும்
-
மனதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராக களமிறங்கிய 'லால் ஹிட்'
-
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் ஓ.ஐ.சி., தீர்மானம்; நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்
-
தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
-
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு 49 நாட்களில் 49 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு
-
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்