டில்லியில் விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி
நமது நிருபர்
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து டில்லிக்கு இந்திய பயணி ஒருவர் விமானத்தில்
வந்தார். டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து சுங்கத்துறையினர் அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
அவர் கொண்டு வந்த லக்கேஜில் வைத்திருந்த, 'புளோர் ஸ்பிரிங்' எனப்படும், கதவு தானாக மூடுவதை கட்டுப்படுத்தும் கருவி இருந்தது.
அதில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்க கம்பிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 கிலோ எடையுள்ள அந்த தங்க கம்பிகளின் மதிப்பு 4.03 கோடி ரூபாய். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
Advertisement
Advertisement