இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு
சூலூர்: மண் வளத்தை பாதுகாப்பது, நீர் நிலைகளை மீட்டெடுப்பது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ‘தாய் மண்ணே வணக்கம்’ அமைப்பை சேர்ந்த விவசாயிகள் பாதயாத்திரையை துவக்கியுள்ளனர்.
கடந்த, 2ம் தேதி தொட்டபெட்டாவில் துவங்கி, மேட்டுப்பாளையம், அவிநாசி, சேவூர், கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலம், பெருந்துறை, பெருமாநல்லூர் வழியாக கருமத்தம்பட்டிக்கு வந்தனர்.
இக்குழுவினர், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இயற்கை விவசாயத்தால், மண் பாதுகாக்கப்படுகிறது. மண் வளம் பெறுகிறது. நஞ்சில்லா உணவு பொருட்கள் மக்களுக்கு கிடைக்கிறது. அதனால், அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும், என, வலியுறுத்தினர். தொடர்ந்து, சூலூர் செஞ்சோலை, காடுகுட்டை பகுதியில், மாணவர்கள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்து விளக்கினர்.
விவசாயி குமார் கூறியதாவது :
விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தண்ணீர், ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, விவசாயிகளிடத்தில் ஊக்கம் அளிக்க, 100 நாட்கள் பாதயாத்திரையை துவக்கி உள்ளோம். நீர் நிலைகளை மீட்பது, இயற்கை விவசாயத்துக்கு மாறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மரபு விதைகளை பாதுகாக்க வேண்டும். இயற்கை சந்தை துவக்க வேண்டும். தற்சார்பு கிராமங்களை உருவாக்க வேண்டும், என, வலியுறுத்தி வருகிறோம். இது விவசாயிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி