சாலையோர குப்பையாய் மாறும் உருளைக் கிழங்கு மூடுபாய்கள்
மேட்டுப்பாளையம்: உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள், மூட்டைகள் சரிந்து விழாமல் இருக்க கட்டி வரும் பாய்களை, கோத்தகிரி சாலையில் குப்பையைப் போல வீசிச் செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில், உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன. நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கு, இங்கு ஏலத்துக்கு விடப்படுகிறது. ஊட்டி சீசன் இல்லாதபோது, வெளி மாநிலங்களில் இருந்து தருவித்து, குளிர் பதன கிடங்குகளில் இருப்பு வைத்து, விற்பனை செய்யப்படுகிறது.
வெளிமாநில லாரிகள், உருளைக்கிழங்கு மூட்டை சரியாமல் இருக்க, புற்களால் நெய்த பாய்களை வைத்து, கட்டிக் கொண்டு வருகின்றனர். உருளைக் கிழங்கை இறக்கிய பின், இந்த பாய்கள் முறையாக அப்புறப்படுத்தப்படுவது இல்லை. இவை, ஓடந்துறை ராமசாமி நகர் பகுதியில், சாலையோரத்தில் வீசப்படுகின்றன. இதனால் இப்பகுதியே குப்பை மேடாகி உள்ளது.
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இவற்றை அகற்றுவதில்லை. இதுதொடர்பாக, லாரி உரிமையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். குப்பையாக கொட்டப்பட்ட பாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும்
-
மனதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்!
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராக களமிறங்கிய 'லால் ஹிட்'
-
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் ஓ.ஐ.சி., தீர்மானம்; நிராகரித்தது இந்திய வெளியுறவு அமைச்சகம்
-
தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
-
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு 49 நாட்களில் 49 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு
-
கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்