புதிய பயிர்கள் சாகுபடிக்கு செயல் விளக்க திடல்

தேனி: தமிழகத்தில் சீமைத்தினை, பாப்பரை, குலசாமை ஆகிய புதிய சிறுதானிய பயிர்கள் 11 மாவட்டங்களில் சோதனை முறையில் சாகுபடி செய்து பார்க்க வேளாண்துறை திட்டமிட்டுள்ளது. இந்த பயிர்கள் குளிர் சிதோஷ்ணத்தில் வளரக்கூடியவை. மேலும் புரத, நார்சத்து, இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளவை. அதில் தேனி மாவட்டத்தில் சீமைத்தினை, பாப்பரை ஆகிய இரு பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளது. சீமைத்தினை கம்பம், பாப்பரை சாகுபடிக்கு பெரியகுளம், போடி வட்டாரத்தில் செயல் விளக்க திடல் அமைக்க உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement