ரோட்டில் உருவான குட்டை காகிதக்கப்பல் விட்ட மக்கள்

பல்லடம்: பல்லடம் அருகே சின்ன வடுகபாளையத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, மழைநீரில் காகிதக் கப்பல் விட்டு பொதுமக்கள் நுாதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில், பொள்ளாச்சி சாலையிலிருந்து கிராமத்துக்குச் செல்லும் சாலை பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படவில்லை. மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், குழிகளில் தேங்கிய மழைநீரில் காகிதக் கப்பல் விட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். விரைவில் சாலையைச் சீரமைக்காவிட்டால், அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், பி.டி.ஓ., எம்.எல்.ஏ.வைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கொட்டும் மழையிலும், தேங்கிய மழைநீரில், காகிதக் கப்பல் விட்ட பொதுமக்கள்.

Advertisement