வேய்ந்தான்குளம் நீர்வழிப்பாதையில் வணிக வளாகம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் தெற்கு வாசல் எதிரே, சேவியர் காலனியில் இருந்து வேய்ந்தான்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையை மறித்து வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
முகமது அலி என்பவர் கட்டியுள்ள இந்த வளாகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த, 2023 டிச., 17ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது சேவியர் காலனி வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது இந்த நீர்வழிப்பாதை வழியாகவே வெள்ளநீர் வேய்ந்தான்குளத்தைச் சென்றடைந்தது.
இந்நிலையில், 1,800 சதுர அடிக்கு அனுமதி பெற்று, 4,200 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா, கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
ஏற்கனவே, இருமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறல் தொடர்பாக அடுத்த நோட்டீஸ் வழங்கி, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.
கலெக்டர் ஆனந்த் மோகன் கூறியதாவது:
கடந்த, ஒரு மாதத்தில், மூன்று முறை சேவியர் காலனிக்கு நேரில் சென்றுள்ளேன். சட்டவிரோத கட்டடம் தொடர்பாக நான் உத்தரவிட்ட பிறகே மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தை உரிய முடிவுக்குக் கொண்டு செல்வேன்.
இதற்கிடையே, தற்போதைய மழைக்காலப் பாதிப்புகளைச் சமாளிக்க தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே, ஆயிரக்கணக்கானோர் தினமும் கடந்து செல்லும் பகுதியில் நீர்வழிப்பாதையை மறித்து கட்டடம் எழுப்பப்படும் வரை அதிகாரிகள் என்ன செய்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பின் நடவடிக்கை எடுப்பதைவிட, நீர்வழிப்பாதைகளை முன்கூட்டியே பாதுகாக்க வேண்டாமா என, அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும்
-
10 நாட்கள் கடந்தும் திணறும் போலீஸ்; செஞ்சி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
-
7 நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடன் பேச்சு இல்லை: ஈரான் திட்டவட்டம்
-
அரசு பஸ் மீது மின் கம்பம் விழுந்து விபத்து: மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு
-
கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
-
வணிகர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்
-
கடலுார் சில்வர் பீச்சில் நிறுவப்பட்ட அழகு சிலை 2 ஆண்டில் இடித்து தரைமட்டம்: வரிப்பணம் விரயம்