முதல்வர் விஜயை அவதூறாகவும், ஒருமையிலும் விமர்சித்த திமுக நிர்வாகி மீது வழக்கு

- நமது நிருபர்-

சென்னையில் நேற்று திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் முதல்வர் விஜயை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசினார்.

இதைக்கேட்டு கனிமொழி அமைதி காத்ததாகவும், பிரியா சிரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தவெகவை சேர்ந்த அமைச்சர்கள் திமுக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை எஸ்பிளனேடு போலீசார், சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Advertisement