அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், ஆவாரங்காடு பகுதியில், அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா கொண்டா-டப்பட்டது.

அ.தி.மு.க., கட்சியின், 55-ம் ஆண்டு துவக்க விழா, பள்ளிப்பாளையம் நகரம், ஒன்றியம் சார்பில் ஆவாரங்காடு பகுதியில், கடந்த, 17ல் கொண்டாடப்பட்டது. விழாவில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான தங்கமணி கலந்துகொண்டு, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரி-யாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, பொது-மக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலாளர் சுப்பிர-மணி, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செய-லாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செல்ல-துரை, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் சிங்கா-ரவேலு மற்றும் கட்சி நிர்வாகி
கள் கலந்து கொண்டனர்.

Advertisement