பணம் வைத்து சூதாடிய 7 பேருக்கு 'காப்பு'

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போலீசார், நாகிரெட்டிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிந்தது. சூதாடிய, 7 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், நாகிரெட்டிபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார், 42, திம்மப்பா, 46, கணேஷ், 35, மாதேஷ், 48, வெங்கடேஷ், 64, சீனிவாசரெட்டி, 53, பாஸ்கர்ரெட்டி, 48, என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 8,300 ரூபாய் மற்றும் ஒரு டார்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement