த.வெ.க.,வில் ஐக்கியமாகிறாரா வாசன்?: அந்துமணி பதில்கள்

4

@block_B@நா.கோபிநாத், திருப்பூர்:

வைகோவின் சமீபத்திய பேச்சுக்களைப் பார்த்தால், த.வெ.க., கூட்டணியில் அவர் ஐக்கியமாவது உறுதியாகி விட்டது போல் தெரிகிறதே?

block_B

தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் அவரது மனப்பான்மை தெரிந்தது தானே, கோபிநாத்! விஜய் அவரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, சட்டென முடிவெடுக்க மாட்டார் எனத் தெரிகிறது. நான் சொல்வது புரிகிறதல்லவா?

@block_Y@ம.செல்வி, வேலுார்:

'காங்கிரசை விட்டு விலகியவர்கள் கோழைகள், துரோகிகள்' என, ராகுல் கடுமையாக விமர்சிக்கிறாரே?

block_Y
Latest Tamil News
காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்கள், ராகுலுக்கு நண்பர்களாக இருக்கின்றனர் என, மல்லிகார்ஜுன கார்கே போட்டு உடைத்து விட்டாரே!

@block_P@கே.சங்கர், சென்னை:

நம் அரசால் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிர் பலியை தடுக்க முடியாதா?

block_P

மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டே ஆக வேண்டும். தொட்டிகளை சுத்தம் செய்யும் இயந்திரங்களை அதிகப்படுத்த வேண்டும். சுத்தம் செய்யும் பணிகளுக்கு மனிதர்களை உபயோகிப்பது பெரும் தவறு!

@block_G@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு:

'அரசியலில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று அரசியல்வாதி; மற்றொன்று அரசியல் வியாபாரி' என்று, அ.தி.மு.க., பழனிசாமி கூறுகிறாரே?

block_G

'அரசியல் வியாதி' என்ற ஒரு ரகம் உண்டே... இந்த வியாதியால் பீடித்தவர்கள், தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடுவதற்கான செலவைச் செய்யாமல், பர்சை வெளியிலேயே காட்டாமல், கட்சியினரையும் ஏமாற்றி, கட்சியையும் ஏமாற்றுவரே... பழனிசாமி மறந்தது ஏன்?

@block_B@என்.மீரான், ராமநாதபுரம்:

காங்கிரசில் இணைய, த.மா.கா., தலைவர் வாசன், மறுத்து வருவதாக கூறப்படுகிறதே?

block_B

காங்கிரசில் இணைந்தால், தனித்து செயல்பட முடியாது; எதிர்காலமும் இல்லை என்று, வாசன் எண்ணி இருக்கலாம். த.வெ.க.,வில் ஐக்கியமாக பச்சைக்கொடியும் தெரிகிறது போலிருக்கிறதே!

@block_Y@கா.ச.தண்டபாணி, அன்னுார்:

'தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளால், சென்னையில் எந்த இடத்திலும் ஒரு சொட்டு கூட தண்ணீர் தேங்கவில்லை' எனறு சேகர்பாபு கூறியுள்ளாரே?

block_Y

ஓ அப்படியா... நான்கு ஆண்டுகளாக பருவ மழை காலத்தில், சேகர்பாபு அமெரிக்கா டூர் சென்றுவிட்டாரோ... சென்னையில் இல்லையோ? மேயர் பிரியா கொடுத்த, 'ரெயின் கம்மிங், அதனால் வாட்டர் ஸ்டாண்டிங்' என்ற பேட்டியையெல்லாம், சேகர்பாபு மறந்து விட்டாரோ?

Advertisement