நுாறு நாள் வேலை திட்டம் 150 நாட்களானது; கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கியது அரசு
சென்னை: ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், பணி நாட்கள், 150 ஆக உயர்த்தப்பட்டு, அதற்கான கூடுதல் செலவுக்கு, 100 கோடி ரூபாய் நிதியையும், தமிழக அரசு விடுவித்துள்ளது.
'விக்சித் பாரத்' வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் 125 நாட்களாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாக அமைந்த த.வெ.க., கூட்டணி அரசு, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவதாக அறிவித்தது. அதை செயல்படுத்த, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின், 'விபி ஜி ராம்ஜி' திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களுக்கு, ஒரு நிதியாண்டுக்கு 125 நாட்கள் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம், நடப்பாண்டில் ஜூலை 1- முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து வழங்குகின்றன. இந்நிலையில், ஏற்கனவே 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாக பயன்படுத்திய தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக, 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதன் மூலம், தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு மொத்தம், 150 நாட்கள் வேலைவாய்ப்பை பெற முடியும்.
அதன்படி, 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், பெண்களை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், தனியாக வசிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிற பாரம்பரிய வனவாசிகள் ஆகிய ஆறு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கூடுதலாக, 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்காக, நடப்பு நிதியாண்டுக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பை பெற தகுதியுள்ள குடும்பங்கள் என, புதிய விதியை அரசு சேர்த்து இருக்கிறது. இதன் வாயிலாக, அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஆறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தவிர, பிறருக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை கிடைக்காது என தெரிகிறது.
விவசாயத்தை ஒழித்து காட்டி விட வேண்டும் என்பதற்கே
இந்த திட்டம்
அரிசி விலை கிலோ 200 ஆக போவது உறுதி
இந்த.100 நாள் திட்டமே ஒரு ஏமாற்று வேலை . இதை நீக்க வேண்டும் .
ஏலேய் பிரியன் உனக்கு எதற்கெடுத்தாலும் பாஜகதான் கிடைத்ததா? உன் முன்னேர்கள் ரொட்டிக்காகவா அல்லது அப்பத்துக்காகவா எதற்காக அந்நிய மதத்திற்கு மாறினார்கள் என்பதை ஆராய்ச்சி செய். முடிந்தால் தாய் மதமான இந்து மதத்திற்கு
திரும்பு.
விவசாயத்தை குழி தோண்டி புதைக்க வேறு எதுவும் வேண்டாம், இந்த திட்டம் போதும். பின் அந்த நிலங்களை வாங்கி தனியார் தொழிற்சாலை கட்டி ....இது நாட்டிற்கு நல்லது அல்ல. வினாச காலம் விபரீத புத்தி. தன் விரல்களால் தன் கண்ணை குத்திக்கொள்வது. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
பாவக்காவின் தமிழக பிம்பம், கிளைதான் தவக்கா. பகையாளியை உறவாடி கெடு என்பதுபோல காங்கிரசை தவக்கா உறவாடி கெடுக்கிறது.
சோம்பேறிகளின் பொழுது போக்காக இந்த திட்டம் இப்போ மாறிவிட்டது, இத் திட்டத்தின் கீழ் வேலைசெய்ய ஒன்றுமே கிடையாது, சும்மா அரட்டை அடிக்க, தூங்க, சீட்டு குழுக்கள் அமைத்து வட்டிக்கு விடுவது, இது நாள்வரை ஒரு உருப்படியான காரியம் கூட இவர்கள் செய்து பார்த்தது இல்லை. ஏன் இந்த தண்ட செலவு.
விவசாயத்தை அழிப்பதற்கான மற்றொரு தீவிர முயற்சி. விஜய்க்கென்ன 5 வருடம் முடிந்ததும் மீண்டும் நடிக்க போய்விடுவார் கோடியில் சாம்பாதிக்க
இது ஒரு தோல்வியடைந்த திட்டமாகும். 30 ஏக்கர் உள்ள எங்களின் நிலத்தில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஐந்து ஏக்கர் நிலத்தில் மட்டும் எங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு சாப்பாட்டுக்கு மட்டும் என் தந்தை பயிரிட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்குப் பின் கண்டிப்பாக நான் விவசாயம் பார்க்க வாய்ப்பு இல்லை காரணம் என்னை அவர் கூட மாட விவசாயத்தில் ஈடுபட வைக்காமல் என்னை படிக்க வைத்து விட்டார். இப்போது எங்கள் நிலத்தை வாங்க புரோக்கர்கள் பலரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நூறு நாள் வேலை திட்டத்தால் பல விவசாயிகளுக்கும்
எங்களை போன்ற நிலைமைதான். இந்த லெட்சணத்தில் 100 நாள் வேலை 150 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்த தமிழக .... அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இது போல பல விவசாயிகளின் பிழைப்பை கெடுத்தார்கள். இப்போது இந்த நடிகரும் அதே வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.
சனி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் தரலாம். கேஷுவல் லீவ் மெடிக்கல் லீவ் சம்பளத்துடன் தர வேண்டும்
இவர்களை அரசு ஊழியராக கருதி, ஓய்வூதியம், மருத்துவ உதவி, இலவசமாக வீடுகள் வட்டியில்லா வாகனங்களுக்கான கடன் , மின் சக்தி வாகனங்களுக்கான வாங்க எல்லா வங்கிகளுக்கும் உத்தரவு இடனும்,மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்