நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
தர்மபுரி; தர்மபுரி அருகே, சவுளுர் பகுதி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சாலை பணிகள் அமைக்கும்போது, அதையொட்டி மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை.
இதனால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்கும் அவலம், ஆங்காங்கே உள்ளது. கடந்த, 17ம் தேதி இரவு தர்மபுரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. தர்மபுரி அருகே, தர்மபுரி - பாலக்கோடு நெடுஞ்சாலை சவுளுர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் கால்வாய்களை முறையாக அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
Advertisement
Advertisement