தர்மபுரி கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்பனை தொடக்கம்
தர்மபுரி; வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், விலையை நிலைப்படுத்தும் திட்டத்தில், 'ஏ' தர சன்னரக அரிசியை ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு ஒரு குடும்பத்திற்கு, 5 கிலோ வீதம், கூட்டுறவு பண்டகசாலை மூலம், நியாயமான விலையில் வழங்க, தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
அதன்படி தர்மபுரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம், 'ஏ' தர சன்னரக அரிசி ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு ஒரு குடும்பத்திற்கு, 5 கிலோ வீதம் விற்பனை, வெளிச்சந்தையில் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், 6 வகையான மளிகை பொருட்களின் விற்பனையை, டி.ஆர்.ஓ., கவிதா, தர்மபுரி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள தர்மபுரி கூட்டுறவு பண்டகசாலை சுயசேவை பிரிவில் துவக்கி வைத்தார். அதன்படி புழுங்கல் பொன்னி அரிசி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ, 130, உளுத்தம்பருப்பு ஒரு கிலோ, 140, பூண்டு ஒரு கிலோ, 240, மல்லி (தனியா) ஒரு கிலோ, 240, மிளகாய் ஒரு கிலோ, 330 ரூபாய்க்கும் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.இதில், தர்மபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது. மண்டல இணைப்பதிவாளர் சரவணன், தர்மபுரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான கோப்பெரும்தேவி, அனைத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள், அனைத்து சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது காங்கிரஸ் தான்; மத்திய அரசு பதிலடி
-
பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: பிரான்ஸ் அதிபரை சாடிய டிரம்ப்
-
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்? தங்கை வசம் சென்றதா ஆட்சி
-
செவ்வாயின் நிலவை குறிவைக்கும் ஜப்பான்: மண் துகள்களை அள்ளிவர ராக்கெட் பாய்ந்தது
-
ஏமன் ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு; 53 வீரர்கள் பலி
-
கொன்றாலும் சரி, டிசம்பரில் வங்கதேசம் செல்வேன் : ஷேக் ஹசீனா திட்டவட்டம்