வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்? தங்கை வசம் சென்றதா ஆட்சி
பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அவரது தங்கை கிம் யோ-ஜாங் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளதையடுத்து, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான்ஜுன் ஸியே வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உடல் வடகொரியாவுக்கு ரகசியமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு அரசு வெளியிடாமல் மறைத்து வருகிறது.
கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜூ-ஏ வசம் ஆட்சி செல்லாமல், அவரது தங்கை கிம் யோ-ஜாங் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார். வடகொரியாவில் உள்நாட்டுக் குழப்பம் வெடிக்காமல் தடுக்க 9,000 சீனப் படைகள் பியாங்யாங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தத் தகவல்களை, வடகொரிய அரசு, சர்வதேச அமைப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்தும், அவர் மரணம் குறித்தும் பல்வேறு தகவல்கள் பரவி, பின் அது வதந்தி என உறுதியானது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
Senthoora - Sydney,இந்தியா
21 அக்,2026 - 05:23 Report Abuse
டிரம்ப் ஐயா இருக்கும்வரை கிம் ஜூங் இருக்கனும், இரண்டுபேரும் ஒன்னாப் போகணும். 0
0
Reply
பிரேம்ஜி - ,
20 அக்,2026 - 08:39 Report Abuse
அவர் சாக மாட்டார்! மற்றவர்களை சாக அடிப்பார்! பொதுவாக சர்வாதிகாரிகள் கடின மனம், தைரியம் இருப்பதால் நீண்ட நாட்கள் வாழ்வது இயற்கை! 0
0
Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா
20 அக்,2026 - 12:46Report Abuse
முக்கால் வாசிச் சர்வாதிகார "மார்க்கண்டேயன் மார்" கடோசியில் நொந்து நூலாகிப் போய்க் கட்டின பொண்டாட்டி சகிதம் தூக்குக் கயிற்றையோ, விஷமருந்தையோ, துப்பாக்கியையோதான் நாடி இருக்கிறான்கள் அவன்களாக இதை நாடாவிட்டால் உடனிருந்து செங்கோலோச்சிய துணைத் தளபதிகளே தக்க ஏற்பாடு செய்து அவன்களை அனுப்பி வைத்திருக்கிறான்கள் 0
0
Reply
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது
Advertisement
Advertisement