தொகுதி மறுவரையறை பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது காங்கிரஸ் தான்; மத்திய அரசு பதிலடி
புதுடில்லி: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த கோரிய காங்கிரஸ் கட்சிக்கு பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிக்க பலமுறை அரசு நேரம் கேட்டது; அதை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது. தற்போது மீண்டும் அதே கோரிக்கையை பொது வெளியில் முன் வைப்பது எதற்கு என்று தெரியவில்லை. ஒருமித்த முடிவை எட்டுவதற்கு திமுக, சமாஜ்வாதி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசிய வா த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிளுடன் அரசு ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியும் இனியும் தடைகளை ஏற்படுத்தாமல் முக்கிய சட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார். தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். ''தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படலாம்'' என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ்க்கு எப்போதுமே பாரதம் நன்றாக இருப்பது பிடிக்காது..... வெளிநாட்டினாரால் இயக்கப்படும் ஒரு கட்சி
உண்மையில் கட்சி விஐபி க்களின் சிறப்பு கவனிப்பில் வென்ற தொகுதிகள் பல பெண்களுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதற்கு எந்தக் கட்சித்தலைமை ஒப்புக்கொள்ளும்? தாம் வெல்ல வாய்ப்பேயில்லாத இடங்களை மட்டும் பெண்களுக்கான தொகுதிகளாக ஆக்க ஆட்சேபணை தெரிவிக்கமாட்டார்கள். நடைமுறையில் பெண்ணுரிமை வெற்று கோஷம்.
தொகுதி மறுசீரமைப்பு / மறுவரை என்றால் என்னவென்று காங்கிரஸ் கட்சிக்கு புரியாமல் கூட இருக்கலாம். ஆகவே பேச்சு வார்த்தை புறக்கணிப்பு. ஸ்டாலின் பாதி புரிந்து ஆரம்பிக்க முன்னால், பிரதிநிதி குறையும் என்றார். ஒரு மாநில கட்சி பாராளுமன்றத்தில் முழு பிரதிநிதி துவம் பெற்று ஒரு பயனும் இருக்காது. காங்கிரஸ் நாட்டை குழப்பும் பாயிண்ட் தேடிக்கொண்டு இருக்கும்.மேலும்
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்