கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
21.10.2026, விருத்தாசலம், வே.ரமேஷ்குமார், 99444 00783, கீ. நேரம் இரவு 9.15விருத்தாசலம், அக். 22–
விருத்தாசலம் அருகே 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வரை கைது செய்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் இன்று காலை 8:30 மணியளவில், கர்னத்தம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, மங்களநாயகி அம்மன் கோவில் குளக்கரையில் நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், காட்டுப்பரூர் ஜெயபால் மகன் விஜயகுமார், 22, எம்.அகரம் புதுகாலனி பழனிவேல் மகன் குணா, 18, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுார் கொங்கராயன் மகன் கவுதம், 19, என்பதும், அவர்களிடம் 45 கிராம் கஞ்சா இருந்ததும் தெரிந்தது.
மூவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், விருத்தாசலம் அடுத்த பரவளூர் நடுத்திட்டு அசோக்குமார் மகன் விஷ்வா, 25, என்பவரிடம் கஞ்சா வாங்கிய தெரிந்தது. இது தொடர்பாக விஷ்வாவை அவரது வீட்டில் மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விஷ்வா உட்பட நால்வரை கைது செய்தனர். மேலும், விஷ்வாவுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் கைதான குணா, கவுதம் இருவரும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசுக் கல்லுாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை