இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: தம்பி மகன், நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்
சென்னை: மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவரது பெரியப்பா தான் சில தினங்களுக்கு முன் மறைந்த இசையமைப்பாளர் தேவா ஆவார்.
நடிகர் கார்த்திக் சபேஷ், தமிழில் ‛டம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். டயாலிசிஸ் உள்ளிட்ட உடல்நல பிரச்னையால் இரு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருவாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். நேற்று நள்ளிரவில் இவரது உயிர் பிரிந்தது. கார்த்திக்கின் தந்தை சபேஷும், பிரபல இசையமைப்பாளர் தான்.
அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட ஈரம் காயும் முன்னே அவரது குடும்பத்தில் இன்னொரு மறைவு அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இன்னும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கார்த்திக் சபேஷிற்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும், பிரிஷானிதாரா, ஹைரானிதாரா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
கீதா சபேஷ் மற்றும் அர்ச்சனா சபேஷ் என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4:30 மணியளவில் வளசரவாக்கம் மயானத்தில் நடக்கிறது. அவரது மறைவுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலியும் செலுத்துகின்றனர்.
வீடியோ பார்க்க..
இசையமைப்பாளர் தேவா இறந்த 4வது நாளில் கார்த்திக் சபேஷ் மறைவு!
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (3)
indian - ,
20 அக்,2026 - 19:59 Report Abuse
humble request to our chief minister to give the state honours and officers tribute to give all passing persons any relationship with film industry 0
0
Reply
Tamilian - ,
20 அக்,2026 - 19:45 Report Abuse
Arasu mariyaathaya because of the Devas relationship 0
0
Reply
சத்திய சோதனை - ,இந்தியா
20 அக்,2026 - 13:22 Report Abuse
எல்லாம் விதியின் விளையாட்டு ஆழ்ந்த இரங்கல் சனி போனா தனியா போகாது என்று சொல்வார்கள் அதன்படி இசையமைப்பாளர் தேவா சார் மறைந்தது சனிக்கிழமை டயாலிசிஸ் செய்யப்பட்டது என்றால் சிறுநீரகப் பிரச்சினை இருந்திருக்கிறது இந்த சிறிய வயதில் சிறுநீரக பிரச்சினை என்றால் மனம் நம்ப மறுக்கிறது 0
0
Reply
மேலும்
-
மெக்கா மசூதியில் 'ஒழுக்கக்கேடான செயல்': வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு சவுதியில் மரண தண்டனை
-
அமெரிக்க கோவிலில் ஹிந்து பக்தர்களை படுகொலை செய்ய சதி; எப்.பி.ஐ., விசாரிக்க 105 எம்.பி.,க்கள் கடிதம்
-
சல்மான் கானை முதலில் குறிவைத்த கொலைகார கும்பல்: வெளியான பரபரப்பு தகவல்கள்
-
சீரான விலையில் வெற்றிலை விற்பனை
-
அமராவதி ராஜவாய்க்காலில் மாசு: மாவட்டத்தில் விவசாய நிலம் பாதிப்பு
-
விஜயதசமி விழா கோலாகலம் இசை கருவிகளுக்கு சிறப்பு பூஜை
Advertisement
Advertisement