விஜயதசமி விழா கோலாகலம் இசை கருவிகளுக்கு சிறப்பு பூஜை
கரூர்,:விஜயதசமியையொட்டி,
கரூர், காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வ ஜனனி
அகடமியில் மாணவ, -மாணவியர் தாங்கள் பயிலும் வீணை உள்ளிட்ட இசை
கருவிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
கல்வி, கலை
மற்றும் ஞானத்தின் தெய்வமான அன்னை சரஸ்வதியை போற்றும் வகையிலும்,
ஆன்மிகம் மற்றும் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவ,- மாணவியர் தங்கள்
கலைத்திறனை மேலும் மெருகேற்றி கொள்ளும் நாளாகவும் விஜயதசமி திருநாள்
கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறுவயது முதலே கலைகளில் ஆர்வம்
செலுத்தும் குழந்தைகள் கலை பயிற்சியை தொடங்குவதும் பாரம்பரியமான
வழக்கமாகும்.அதன்படி, கரூர் காந்திகிராமத்தில் ஸ்ரீவிஸ்வ ஜனனி
அகடமியில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. மாணவியர், தாங்கள்
வாசிக்க கற்றுக் கொள்ளும் வீணை உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளை
வரிசையாக வைத்து, மலர்களால் அலங்கரித்தன. ஆசிரியர்கள், மாணவியர்
இணைந்து சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடத்தினர். பூஜைக்கு பின்,
மாணவியர் தாங்கள் கற்ற வீணை வாசிக்கும் திறமையை வெளிப்படுத்தும்
விதமாக சில கீர்த்தனைகளை இசைத்தனர்.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை