மெக்கா மசூதியில் 'ஒழுக்கக்கேடான செயல்': வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு சவுதியில் மரண தண்டனை
ரியாத்: புனித மெக்கா நகரிலுள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா பகுதியைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவரும் மெக்காவில் உள்ள மசூதியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் மசூதி வளாகத்தில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி சவுதி போலீசாரால் முன்பு கைது செய்யப்பட்டனர்.
சவுதி சட்ட விதிகளில் உள்ள தாஸிர் பிரிவின்படி, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மன்னரின் ஒப்புதலுடன் கடந்த அக்.,14 அன்று மெக்கா பகுதியில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ரகசியமாக நடந்ததா?
அவர்கள் இருவருக்கும் என்ன தண்டனை விதிக்கப்பட்டது, விசாரணை எவ்வாறு நடந்தது போன்ற விவரங்களை சவுதி அரசு முன்கூட்டியே வங்கதேச அரசிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரே வங்கதேச துணைத் தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நபர்கள் மசூதிக்குள் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டதாகவும், அதற்குத்தான் இந்த உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், சவுதி உள்துறை அமைச்சகம் ‛ஒழுக்கக்கேடான செயல்' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர்கள் செய்த குற்றம் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை வெளியிடவில்லை.
சர்ச்சை:
அண்மையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவரசா என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, இலங்கை அரசின் தூதரக தலையீட்டால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், வங்கதேச தொழிலாளர்களின் விவகாரத்தில், வங்கதேச அரசு தலையிடுவதற்கு முன்பே, சவுதி அரசு அதிரடியாக மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இது வங்கதேச அரசு மட்டுமன்றி, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச அரங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் டம் என்ன கோயிலில் அர்ச்சகன், சர்ச்சுகளில் பிரதர்கள் அல்லது பாதிரிகள். சில சாமியார்கள் நிஜமாக கடும் தவம் புரிபவர்கள். தவ வாழிக்கையில் இருப்பதால் மனித நாட்ட மாட்டம் இல்லாத இடத்திற்கு என்று தவ வாழ்கை செய்ய கிறார்கள். இன்றும் பல மாலியின் உச்சிகளில் மனிதர்கள் ஏறுவது கடினம் அலகு சென்று விடுவார்கள்.
புனித மான இடத்தில் ஒழுக்க கேடான செயல் என்பதால் மன்னிக்கும் மனோ பாவம் கிடையாது. சரி தான். முதலில் பாக்கி பசங்க்களாக யிருக்கும்பா என்று நினைய்யதேன் அனால் வக்கிர புத்தி வாங்க்கால் தேச காரன் என்பது தெரிந்தது. கேமரா எல்லாம் இருந்தும் இப்படி எப்படி?
எவ்வளவோ கக்கூஸ் இருக்கு அங்ககே கதவை சாத்தமல் செய்ய வேண்டியது தானே. 3/4 களுக்கு உரச கூடாது. இடம் பொருள் ஏவல் தெரியாது. அப்போதைக்கு அடக்கி யாகனும். அது தான். கடையசியில் மண்ணுக்குள்ளேயே சென்று அடக்கி கொள்ள வேண்டியாயிடுச்சி.
அடிமைகளை பூசலாம் என்று நபி சொல்லி கொடுத்ததைதானே செய்தான். இதற்கு நபி கிட்டேயே அனுப்பினால் சரியா?
kaahmir பற்றி கூக்குரல் இடும் வாடகை வாயர்கள் இன்னபிற george soran coolis எங்கே?மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி