சீரான விலையில் வெற்றிலை விற்பனை
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம்,
கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார்,
கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, நந்தன்கோட்டை, மகாதானபுரம்,
திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி ஆகிய
பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
வெற்றிலை பறிக்கப்பட்டு விவசாயிகள் லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன்
மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர்.தற்போது
வெற்றிலை சீரான விலையில் விற்கப்படுகிறது. 100 வெற்றிலை கொண்ட ஒரு
கவுளி, 25 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும், 100
கவுளி கொண்ட மூட்டை ஒன்று, 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெற்றிலை மூட்டைகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல்
செய்யப்பட்டு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம்,
திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சில்லரை
விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும்
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்