கோவில் சொத்துகள் இறைவனுக்கே உரியவை, அரசுக்கு அல்ல: சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு
நமது டில்லி நிருபர்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி நாகபாளையம் மாரியம்மன், பொன்னாச்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 10 சென்ட் 'இனாம்' நிலத்தை, தற்காலிக அறங்காவலர் ஒருவர் 2017ம் ஆண்டு தாலுகா அலுவலகம் கட்டுவதற்காகத் தமிழக அரசுக்குத் தானமாக வழங்கினார்.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் நரசிம்மா, அலோக் ஆராதே விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
* கோவில் சொத்துகள் இறைவனுக்கு உரியவை, அவற்றை அரசு கையகப்படுத்த முடியாது.
* கோவில் சொத்துகள் தொடர்பான ஒவ்வொரு முடிவும் அந்த அறக்கட்டளையின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்; அரசின் நிர்வாக வசதிக்காக எடுக்கப்படக் கூடாது.
* பாதுகாவலராகச் செயல்படும் அரசு, தான் பாதுகாக்க வேண்டிய மத அல்லது அறக்கட்டளை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க கூடாது. அதிகாரிகளையும் அபகரிக்க அனுமதிக்க கூடாது.
* கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது; கோவில் சொத்துக்களின் உரிமையாளராக அரசு மாறிவிட முடியாது.
* மத அல்லது அறக்கட்டளை நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிக்கும்போது, அவற்றைச் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது; அவற்றை விருப்பப்படி தாரைவார்க்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
* அறங்காவலர் பொறுப்பில் இருப்பவர் தன்னிச்சையாக கோவில் சொத்துகளை மற்றவர்களுக்கு வழங்க முடியாது.
* பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள், ஆட்சியாளர்கள், மக்கள் அளித்த நன்கொடை நிலங்கள், கட்டடங்கள், நகைகள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை; அவை எப்பொழுதுமே அப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே வழங்கப்பட்டன.
* நன்கொடை வழங்கியது, அதை அளித்தவருக்கோ, பூசாரிக்கோ, அறங்காவலருக்கோ அல்லது அரசுக்கோ சொந்தமானதாக இருக்காது; அது இறைவனுக்குச் சொந்தமானதாகிவிடும்.
* சட்டப்படி நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கும், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. ஹிந்து மத நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள கட்டுப்பாடு குறித்த விவாதங்களுக்கு மத்தியில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
@block_Y@
மாத வாடகை கொடுங்கள்!
பொது நிதியைப் பயன்படுத்தி கோவில் நிலத்தில் ஏற்கனவே ஒரு தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு இருப்பதால், அந்த நிலத்தை அரசு தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் இருந்த குத்தகை ஒப்பந்தத்தை சுப்ரீம்கோர்ட் ரத்து செய்யவில்லை; கட்டுமானப் பணிக்காக நிலம் ஒப்படைக்கப்பட்ட தேதியான 2019ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் மாதாந்திர வாடகை செலுத்த வேண்டும்; மாதம்தோறும் 31 ஆயிரம் ரூபாய் வாடகையை கோவில் நிர்வாகத்துக்கு நிலுவை தொகையுடன் அரசு செலுத்த வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.block_Y
இது இறைவனுக்கு தெரியுமோ?
நிறைய கோயில்களில்
" இந்தக் கோயில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது "என்று
பலகைகள், அறிவிப்பு பலகைகள் இருக்கிறது. முதலில் HRCE முதன்மை செயலர் மற்றும் ஆணையர்
" கட்டுப்பாட்டில் " என்ற வார்த்தையை நீக்கி " மேற்பார்வையில் " என்ற வார்த்தையை போடவேண்டும்.
மேலும் என்று முதல் இந்த கோயில்
அறநிலைய துறை மேற்பார்வையில் இயங்குகிறது மற்றும் அந்த கோயிலின் செயல் அலுவலர் நியமன ஆணை முழு விவரங்களுடன் யார் அந்த நியமன ஆணையை பிறப்பித்தது போன்ற விவரங்கள் நியமன ஆணையின் xerox copy ஆகியவை
அறிவிப்பு பலகையில் வைக்க உத்தரவு போட வேண்டும். கோயில் வளாகத்தில் இருக்கும் HRCE அலுவலகங்களை காலி செய்ய வேண்டும். HRCE அலுவலகங்களின்
மின் செலவு, பராமரிப்பு ஆகியவை
கோயில் நிதியில் இருந்து செலவு செய்யக் கூடாது. HRCE அறநிலையத் துறை அமைச்சகம் நிதியில் இருந்து கட்டப் படவேண்டும்.
அந்த ஆட்களை ஜெயிலில் போடனும் மாதம் லட்சம் ரூபாய் வாடகை வாங்கி அதனை கோவில் செலவுக்கு தரவேண்டும் இதில் இ.ஓ திருடாமல் பார்க்கவேண்டும்
கோவில் சொத்துகள் இறைவனுக்கே உரியவை, அரசுக்கு அல்ல: சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு. மிக சரியான தீர்ப்பு . அந்த காலத்தில் புரவிகள்/அத்திரிகள் செல்லும் வழியிலே அரசர்கள் அன்னச்சாவடி கட்டி வழிப்போக்கர் ஓய்வெடுப்பதற்கான கொட்டகையும் கட்டிக்கொடுத்தனர் அன்னச்சாவடிக்கு அருகாமையில் அமைந்த சிற்றூர்களில் ஹிந்து கோவில்களுக்கு ஏராளமான நிலங்களை தானமாக வழங்கினர் . அரசர்கள் எப்போதோ அளித்த அறக்கொடைச் சிற்றூர்களிலிருந்து தேவையான பொருட்கள் ஏழுநாட்களுக்கு ஒருமுறை அன்னச்சாவடிக்கு வந்துகொண்டிருக்கும் .அன்னச்சாவடி காலம் காலமாக வழிப்போக்கர் பசியாற்றியது .ஆனால் திராவிட கூட்டங்கள் கடவுள் மறுப்பு என்று பெயரில் கோவில் சொத்துக்களை கொள்ளையடித்தனர் .இது தான் உண்மை
Temples are no separate sovereign,. When the sovereign state has the responsibility of its maintence, administration and above all its security and structural upkeepng of its original state for forthcoming hundreds of years obviously it owns it - means the entire people of India and no need to say about its assets then.
All the assets donated to religious institutions inclusive of all religions by erstwhile rulers including mughal rulers, naturally should belong to Govt. of India. Reforms in wakht board is.very much needed and it should be nationalised,.
இந்த தீர்ப்பு பாதி சரி மீதி சரியில்லை. ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்கு. தானம் குடுத்த அதிகாரிக்கு வாழ் நாள் தண்டனை குடுத்திருக்கணும் அதிகாரியோட வீட்டை இடிச்சு தள்ளியிருக்கணும். இதுல தரகு ன்னு பணம் கைமாறி இருந்தால் அதை கஜானாவுக்கு கொண்டு வரணும். கட்டிடத்தை இடித்து விட்டு கோயிலில் நிலத்தை ஒப்படைக்கணும். இடிக்கும் செலவை அதிகாரியே குடுக்கணும். இதெல்லாம் இருந்தாதான் தீர்ப்பு முழுசா ஆவும். இருந்தாலும் நீதிமான் களுக்கு நன்றி. இறைவன் சொத்துன்னு தீர்ப்பு குடுத்ததுக்கு. சொதப்பல்களை தவிர்த்து நல்ல தீர்ப்பு தான்.
வெறும் 31000 மட்டுமே வாடகை எப்படியிருந்தாலும் ஒரு ஏகாக்ரவது இருக்காதா
இறைவன் பேரை சொல்லி யார் நிர்வாகம் செய்தாலும் சாப்புடுவாங்க சாமியோவ்..
காது கேட்குதா. ?மேலும்
-
சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்
-
'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு
-
உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
-
பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
-
நலத்திட்ட உதவி தொகை வழங்கல்
-
ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா