குட்கா விற்ற இருவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி,:தர்மபுரி மாவட்டம் பொம்மிடி எஸ்.ஐ., ஜீவானந்தம் உள்ளிட்ட போலீசார், வேப்பாடி மாரியம்மன் கோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் நேற்று மதியம் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தமிழரசன் மனைவி ஜெயலட்சுமி, 41. அரசு மதுபானங்களை விலைக்கு வாங்கி வந்து, சந்து கடையில் கூடுதல் விலை வைத்து விற்று வந்தார்.

அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து, 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று பெட்டிக்கடையில் குட்கா விற்ற கண்ணன், 49, என்பவரை கைது செய்து, 22 குட்கா பாக்கெட்களை பொம்மிடி போலீசார்பறிமுதல் செய்தனர்.

Advertisement