23 குழந்தைகளுக்கு கன்யா பூஜை
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ, 100 அடி சாலையில், ஸ்ரீதேவி,
பூதேவி சமேத லட்சுமி நாராயணர், பாலமணிகண்டன் கோவில் உள்ளது. இங்கு,
உலக நன்மை வேண்டியும், ஹிந்து சம்பிரதாயங்களை அடுத்த தலைமுறை
தெரிந்து கொள்ளும் வகையிலும், ஆண்டுதோறும் விஜயதசமி நாளில், 4
முதல், 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, தமிழ்நாடு பிராமணர்
சங்க ஓசூர் கிளை தாம்ப்ராஸ் சார்பில், கன்யா பூஜை நடத்தப்படும்.
அதன்படி,
3ம் ஆண்டு கன்யா பூஜை நடந்தது. இதில், 23 குழந்தைகளை
அம்பிகையாக பாவித்து நலங்கிட்டு, வஸ்திரம் மற்றும் அலங்கார
பொருட்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டு, கன்யா பூஜை நடத்தப்பட்டது.
ஏற்பாடுகளை, தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் சுதா நாகராஜன்,
மகளிரணி செயலாளர் ரோகிணி கணேஷ், செயலாளர் சீனிவாசன்,
துணைத்தலைவர்கள் சுவாமிநாதன், கிருஷ்ணசாமி, இணை செயலாளர்கள்
ராமன், சுவாமிநாதன், சங்கர், அமைப்பு செயலாளர் கணேஷ், இளைஞரணி
செயலாளர் சீனிவாசமூர்த்தி உட்பட பலர் செய்திருந்தனர்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி