15 ஆண்டாக மின்சார வசதியின்றி வாழும் மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்
ஓசூர்:ஓசூர் அருகே, 15 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் மாணவ, மாணவியர் படிக்க வேண்டியுள்ளது
.
கிருஷ்ணகிரி
மாவட்டம், சூளகிரி ஒன்றியம், சானமாவு பஞ்., உட்பட்ட பென்னிக்கல்
கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இக்கிராமத்தின் ஏரி அருகே அரசு மலை புறம்போக்கு நிலத்தில், 15க்கும்
மேற்பட்ட ஏழை, எளிய மக்கள், 15 ஆண்டுக்கு முன், வீடு கட்டி வாழ்ந்து
வருகின்றனர். தங்களுக்கு பட்டா வழங்க, பல ஆண்டுகளாக மக்கள் மனு
கொடுத்தும், மாவட்ட நிர்வாகமும், அரசும் கண்டுகொள்ளவில்லை.
அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி உள்ளதால், இப்பகுதியில் உள்ள,
15 வீடுகளுக்கும் மின்வாரியம் மூலம் இதுநாள் வரை மின் இணைப்பு
வழங்கவில்லை.
இப்பகுதியில் இரவில் வெளியே நடமாட முடியாத
அளவிற்கு, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த, 6
மாதத்திற்கு முன், பள்ளி மாணவி ஒருவரை, பாம்பு தீண்டியதில், உயிருக்கு
ஆபத்தான நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். நேற்று முன்தினம், 6 அடி நீள
மலைப்பாம்பு ஒன்று, அப்பகுதியில் ஊர்ந்து சென்றது. இதை பார்த்த
இளைஞர்கள், பாம்பை பிடித்து, பத்திரமாக வனத்தில் விட்டனர்.
இப்படி,
உயிருக்கு ஆபத்தான நிலையில், மக்கள் வசித்து வரும் நிலையில், மின்சார
வசதி இல்லாததால், பள்ளி, கல்லுாரி செல்லும், 12க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர், இரவில் படிக்கவோ, வீட்டு பாடங்களை எழுதவோ முடியாமல்
தவிக்கின்றனர். மெழுவர்த்தி, எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான், விஷ
ஜந்துக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமர்ந்து, படிக்க
வேண்டியுள்ளது. அச்சத்துடனே இரவை கழிக்க வேண்டியுள்ளது.
இது
குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'தினமும் இரவில் ஆபத்தான
வாழ்க்கையை தான் வாழ்கிறோம். 15 ஆண்டுகளாக மனு கொடுத்தும்,
எங்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு
முன், 5 வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சமூக விரோதிகள்
நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட சில புறம்போக்கு நிலங்கள்
தவிர்த்து, மற்ற புறம்போக்கு நிலங்களில், 250 சதுர அடி வரை கட்டப்பட்ட
வீடுகளுக்கு, அரசு அதிகாரிகளின் தடையில்லா சான்று இல்லாமல், மின்
இணைப்பு வழங்கலாம் என, தமிழக அரசு மின்
வாரியத்திற்கு சமீபத்தில்
ஒப்புதல் வழங்கியது. ஆனால், எங்களுக்கு மின் இணைப்பு வழங்க
நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
மேலும்
-
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு விடிவுகாலம்: வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு
-
மொபைல் போன் திருடிய சிறுவர்கள் கைது
-
கடலுாரி ஜி.ஆர்.கே., குழுமத்தின் பிரபா டெக்ஸ் கோலாகல திறப்பு விழா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
-
வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
-
தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
-
வங்கி ரகசிய எண்களை யாருக்கும் பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘அட்வைஸ்’