விஜயதசமியை முன்னிட்டு வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே, லளிகம் கிராமத்தில் விஜயதசமியை முன்னிட்டு, வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, லளிகம் கிராமத்தில், நவராத்திரி கடைசி நாளில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த தினத்தை கொண்டாடும் வகையில், விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சென்றாய பெருமாள், பாலதண்டாயுதபாணி, அங்காளம்மன், குறிஞ்சி மாரியம்மன், பொன்னியம்மன், விநாயகர் உட்பட கிராமத்தில் உள்ள அனைத்து உற்சவ தெய்வங்களையும் ஊர்வலமாக அழைத்து வந்து, ஒரு சேர நின்று, வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி நாளில், வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சியின்போது, லளிகம் கிராமத்தில் உள்ள அனைத்து உற்சவர் தெய்வங்களும் ஒரு சேர உலா வருவது, தனி சிறப்பாகும். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement