தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் பழுதடைந்த அரசு பஸ்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம்–-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டன. பாரதிநகரில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பம் தாழ்வான பகுதி என்பதால் இரு அடி அளவுக்கு மழைநீர் தேங்கி காணப்பட்டன.
வாகனங்கள் அந்தப் பகுதியில் ஊர்ந்து சென்றன. அப்போது புதிய பஸ் ஸ்டாண்ட் சென்ற அரசு பஸ் மழைநீர் தேங்கிய பகுதியில் பழுதாகி நின்றது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைநீர் தேங்கிய பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் ராஜிவ், பழுதடைந்த பஸ்சை பணிமனை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், அப்பகுதியில் தேங்கிய மழை நீரை உடனே வெளியேற்றுமாறும், பாரதிநகர் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மழைநீர் வடிகால்களை துார்வாரி தண்ணீரை அகற்ற அறிவுறுத்தினார்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி